srivalli lyrics tamil

By good luck
0

srivalli lyrics tamil 

நான் பாக்குறன் பாக்குறன்

பாக்காம நீ எங்க போற

நீ பாக்குற பாக்குற

எல்லாம் பாக்குற என்ன தவிர


காணாத தெய்வத்தை

கண் மூடாம பாக்குறியே

கண் முன்னே நான் இருந்தும்

கடந்து போகிறியே


பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா

பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா


கூட்டத்துல போனா

நான் நடப்பேன் முன்னே

நீ நடந்தா மட்டும்

வருவேன் உன் பின்னே

எவனையுமே பாத்து

தலை குனிஞ்சது இல்ல

உன் கொலுச பாக்கத்தான்

தலை குனிஞ்சேன்டி புள்ள


பாதகத்தி உன்ன நான்

பாக்க சுத்தி வந்தாலும்

பாத்திடாம போறியே

பாவம் பாக்காம


பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா

பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா


நீ ஒண்ணும் பெரிய

பேரழகி இல்ல

தேறாத கூட்டத்தில் அழகா

தெரியுறடி புள்ள


பதினெட்டு வயச

தொட்டாலே போதும்

நீ இல்ல எல்லா பொண்ணும்

தினுசாதான் தோணும்


குத்துக்கல்லுக்கு சேல கட்டி

விட்டா கூட சிட்டா தெரியும்

கொத்து பூவ கூந்தலில் வச்சா

எந்த பொண்ணும் போதை ஏத்தும்


ஆனா பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா

பார்வை கற்பூர தீபமா

ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)